கனடாவில் ஆற்றில் வீழ்ந்த 5 வயது சிறுவனைக் காணவில்லை

28

 

கனடாவில் ஆற்றில் வீழ்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக்கின் மயுரிசி ஆற்றில் குறித்த சிறுவன் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சகோதரருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஐந்து வயது சிறுவன் கீழே வீழந்தவுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகாமையில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளான்.

தீயணைப்புப் படையினர், ஹெலிகொப்டர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவனைத் தேடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணகைளையும் ஆரம்பித்துள்ளனர்.

SHARE