கனடாவில் காணாமல் போன 10 வயது சிறுவன்?

33

 

கனடாவின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் 10 வயதான சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சிறுவனை கண்டு பிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

10 வயதான லூசன் கிரீன் (Lucan Green) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.பர்ன்ஹாம்தோர்ப் மற்றும் எரின் மில்லஸ் ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் குறித்த சிறுவனை இறுதியாக கண்டதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் ஐந்து அடி உயரமானவர் எனவும் 100 பவுன்ட்கள் எடை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தலைமையிர் கட்டையாக வெட்டப்பட்ட நிலையில் கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணாமல் போன 10 வயது சிறுவனை தேடிக் கண்டு பிடிக்கும் நோக்கில் பொலிஸார் பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 905-453-2121 அல்லது 1-800-222 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE