கனடாவில் பதவியை ராஜினாமா செய்த மற்றுமொரு அமைச்சர்!

21

 

ஒன்றாரியோ மாகாணத்தில் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

மாகாணத்தின் தொழில் அமைச்சர் மொன்டே மெக்நொவ்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனியார் துறையில் பணியொன்று கிடைக்கப் பெற்ற காரணத்தினால் அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த மாதத்தில் பதவி விலகிய மூன்றாவது மாகாண அமைச்சர் மொன்டே என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் தமது பதவி விலகுகைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மொன்டேவின் சேவைகளுக்காக முதல்வர் டக் போர்ட் நன்றி பாராட்டியுள்ளார்.

SHARE