கனடாவில் பெற்றோரின் சடலம் அருகில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட மகன்

117

 

ரொறன்ரோவில் பெற்றோரின் மரணம் தொடர்பில் 28 வயதான நபர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை எட்டோபிகோக் பகுதி குடியிருப்பு ஒன்றில் முதியவர்கள் இருவர் இறந்து கிடந்ததாக கண்டறிந்தனர். கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்தே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த முதியவர்களின் சடலம் அருகில் கத்திக்குத்து காயங்களுடன் 28 வயதான நபர் ஒருவரும் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து காயம்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பகல், உயிரிழந்தவர்கள் 68 வயதான கொலின் ஹென்றி மற்றும் 67 வயதான வெரோனிகா ஹென்றி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேக நபர் ஆல்ஃபா ஹென்றி எனவும், அவர் மீது இரு முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும், கைதான நபர் அந்த தம்பதியின் மகன் எனவும், மேலதிக தகவல்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE