கனடாவில் முக்கிய பாடசாலையில் வெடிகுண்டு மிரட்டல்!

30

 

கனடாவிலுள்ள Caledon உயர்நிலைப் பாடசாலை மற்றும் அருகிலுள்ள Walmart ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து Caledon பொலிஸ் பொறுப்பதிகாரி மேரி லூயிஸ் கியர்ன்ஸ் கருத்து வெளியிடுகையில், தெருவின் குறுக்கே அமைந்துள்ள வால்மார்ட் சூப்பர் சென்டருடன் மேஃபீல்ட் மேல்நிலைப் பாடசாலைக்குள் வெடிகுண்டு இருக்கக் கூடும் என்று இன்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

இதனையடுத்து உடனடி அச்சுறுத்தல் குறித்து தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலை மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த வகையில், மாணவர்கள் பிரமலியா சாலையில் அருகிலுள்ள ஜேம்ஸ் க்ரீவ் பொது பாடசாலைக்கு மாற்றப்பட்டனர், அங்கு பெற்றோர்கள் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Caledon பொலிஸ் பொறுப்பதிகாரி மேரி லூயிஸ் கியர்ன்ஸ்(Mary Louise Kearns) மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE