கனடாவில் 12 வயதான சிறுமியின் நெகிழ வைக்கும் செயல்; குவியும் பாராட்டு

136

 

கனடாவில் 12 வயதான சிறுமியொருவர் தனக்கு கிடைத்த பரிசு தொகையை சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அன்ட்ரேய் சங் என்ற 12 வயதான சிறுமி மிகச் சிறந்த பியானோ கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.மிகவும் சிரமமான இசை குறிப்புக்களையும் மிக லாவகமாக எளிதில் பியானோவில் வாசிக்கும் திறனை சங் கொண்டுள்ளார்.

கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த இந்த சிறுமி ஆறு வயது முதல் இசைத்துறையில் தனது ஆர்வத்தை காண்பித்து வருகின்றார்.

தான் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் போது பியானோவில் இசையை வாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்தை கொண்டிருப்பதாக சங் கூறுகின்றார்.

இசை நிகழ்ச்சிகளில் தான் ஈட்டிய 30000 டொலர் பணத்தை மூன்று அறக்கட்டளைகளுக்கு பிரித்து வழங்க அவர் தீர்மானித்துள்ளார்.தன்னைப் போலவே இசையில் ஆர்வம் உள்ள வசதி குறைந்த குழந்தைகளின் கல்விக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டுமென 12 வயது சிறுமியான சங் கோரியுள்ளார்.

சாங்கின் செறய்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE