கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி தம்பதி

61

 

கனடாவில் அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் வென்றெடுக்கப்பட்டது.

இந்த லொத்தர் சீட்டினை ஒன்றாரியோயின் லேக்பீல்டைச் சேர்ந்த தம்பதியினர் வென்றெடுத்துள்ளனர்.

லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.தாங்கள் வாழ்ந்து வந்த அதே கிராமத்தில் வாழ்வதற்கு உத்தேசித்துள்ளதாக டக் மற்றும் எடின் ஹானோன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டை புனரமைத்து அதே வீட்டில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அயலர்கள் மிகவும் நல்லவர்கள் எனவும் இந்த கிராமிய வீட்டை விட்டு செல்லும் எண்ணமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

70000 டொலர்கள் வென்றெடுக்கப்பட்டதாகவே ஆரம்பத்தில் இந்த தம்பதியினர் கருதியுள்ளனர்.இவ்வளவு பாரிய தொகை பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE