கனடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ்

41

 

இரண்டு கனடிய பிரஜைகள் கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்டிகுவாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கனடிய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தின் போது ஆண் ஒருவரும் நீரில் மூழ்கியதாகவும் அவரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அன்டிகுவாவின் டெவில்ஸ் பிரிட்ஜ் (Devil’s Bridge) என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே பகுதியில் கனடிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE