கனடிய சிறுமியிடம் அநாகரீகமாக நடந்த அமெரிக்க 14 ஆண்டுகள் சிறை

46

 

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கனடிய சிறுமி ஒருவரை இணைய வழியில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அமெரிக்க பிரஜைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஜொனதன் ட்ரவிஸ் ப்ளோரா என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மேற்கு குயின்ட் பகுதியைச் சேர்ந்த 14 வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஒன்றரியோ போலீசாரும் அமெரிக்க போலீசாரும் இணைந்து இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் இணையயம் ஊடாக குறித்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் வகுப்பு தோழன் என்ற தோரணையில் அமெரிக்க பிரஜை தொலைபேசியில் பல தடவைகள் உரையாடியுள்ளதாகவும் அநாகரிகமான முறையில் பேசி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழமைக்கு மாறாக தொலைபேசி கட்டணம் அதிகரித்த காரணத்தினால் அது குறித்து சிறுமியின் தந்தை ஆராய்ந்த போது இந்த குற்றச்செயல் அம்பலமாகியுள்ளது.குறித்த சிறுமி ஒரு மாதத்தில் இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட குறுஞ்செய்திகளை குறித்த நபருக்கு அனுப்பியுள்ளமை தெரிய வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த அமெரிக்கப் பிரஜைக்கு அந்நாட்டு நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.

SHARE