கமர்ஷியல் ஹீரோயினாகும் ஆசை இல்லை : மீரா நந்தன் 

402கமர்ஷியல் ஹீரோயினாகும் ஆசை இல்லை என்றார் மீரா நந்தன். வால்மீகி, அய்யனார், சூர்யநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மீரா நந்தன். தற்போது சண்டமாருதம் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார். தமிழ் படங்களில் அதிகம் நடிக்காதது ஏன்? என்றபோது மீரா நந்தன் பதில் அளித்தார். அவர் கூறியது:சண்டமாருதம் படத்தில் சரத்குமார் காதலியாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். எப்போதாவது ஒரு முறைதான் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

இப்படி சொல்வதால் ஹீரோயினாக நடிக்க விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வேன். என்னை தேடி வரும் எல்லா படத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. சினிமாவில் நடிக்க வந்த 2 வருடத்துக்கு பிறகுதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவே கற்றுக்கொண்டேன்.

படங்களை ஒப்புக்கொள்ளும்போது அதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும் நான் கவனித்துதான் படத்தை ஏற்கிறேன். என்னுடைய வேடத்துக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நான் எண்ணியது கிடையாது. இவ்வாறு மீரா நந்தன் கூறினார்.

 

SHARE