கவினுடன் இணையும் சிவகார்த்திகேயன்

21

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் ‘டாடா’. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து கவின் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடன் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா மோகன் நடிகை பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

SHARE