காசாவில் உள்ள மக்கள் உடனே வெளியேறுங்கள்: இஸ்ரேல் எச்சரிக்கை

437
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையிலான ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும்படி எச்சரித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைவதை தவிர்க்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.

இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி உள்ளது. இதனால், கடலோர பகுதகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தினர் 1200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் நகரங்கள் மீது வீசியுள்ளனர். ஆனால், அதனை இஸ்ரேல் ராணுவம் முறியடித்து வந்தது. நேற்று இரவு எரஸ் கிராசிங்கில் ராக்கெட் விழுந்து வெடித்ததில் ஒருவர் இறந்ததே இஸ்ரேலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE