காசா எல்லையில் இடம்பெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய வம்சாவளி வீரர்!

39

 

இஸ்ரேல் ஹமாஸ் இடையே இரண்டு மாத காலமாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் நாளாந்தம் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த வரிசையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய வம்சாவளியான 34 வயதான ஆஷ்டோட்-ஐ சேர்ந்த கில் டேனியல்ஸ் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற சண்டையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் எதிர்வரும் புதன் கிழமை நடைபெற்றது.

காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

“ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது.

அந்த வகையில் நேற்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்,” என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது.

SHARE