காலத்திற்கு காலம் கொள்கையை மாற்றி வரும் முஸ்லீம் அரசியல்வாதிகள்

478

மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து வந்தனர். தமிழ் பேசும் மக்களின் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு அக்கால கட்டத்தில் முஸ்லீம் இனத்தவர்களின் பங்களிப்பு காத்திரமாக அமையபெற்றது.

ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாற்றம் அடைந்து விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முஸ்லீம் இனத்தவர்கள் காட்டிக் கொடுத்தனர். இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் வடபகுதி முஸ்லீம் மக்கள் கட்டாயமாக வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Hageem2hakkem-and-mahinda

இவ்வாறான நிகழ்வானது தமிழ் மக்களிடையேயும் தமிழ் பேசும் முஸ்லீம் இடையேயும் கசப்புணர்வை தோற்றுவித்தது. இதன் காரணமாக இலங்கையை பிரதிபலிக்கின்ற முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டு குழுக்களாக தமிழ் மக்களின் போராட்டத்தினை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வந்தனர்.

இவ்வாறு இருக்கின்ற காலகட்டத்தில் அக்காலகட்டத்தில் புலிகளின் இராணுவக் கட்டளைத் தளபதியாக இருந்த கருனா அம்மான் தலைமையில் காத்தான்குடி பல்லிவாசல் படுகொலை நடந்தேறியது.
இதன் காரணமாக புலிகளுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையே பெறும் விரிசல் ஏற்பட்டது. இச்சம்பவமானத இரசாங்கத்திற்கு மகிழ்வை ஏற்படுத்திய செயலாகும். ஆதன் பிற்பாடு முஸ்லீம் தமிழ் சமுதாயத்திற்கிடையே கசப்பான நிலைமை மாறி சுமூகமான நிலை தோன்றியது. ஆனாலும் முஸ்லீம் காங்கிரஸ் என்று தனித்து செயற்பட ஆரம்பித்தனர்.Sudar-News-211மறைந்த அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். அதன் பிறகு சந்திரிகா அம்மையாரின் ஆட்சி காலத்தில் ஹெலிகொப்டர் சதி மேற்கொள்ளப்பட்டார்.

ஆதன் பிறகு முஸ்லீம் காங்கிரசை வழிநடத்திச் செல்வதற்கு தகுந்த தலைவர்கள் இல்லை. ரவூஹகிம், ஹிஸ்புள்ளா, அலவி மௌலானா, ர்.ஆ.பௌசி, அஸ்வர், பசீர் சேகுத்தாவுத், அமீர் அலி, அலிஸாஹீர் மௌலானா, ரிஷாட் பதூதின் போன்றவர்கள் அரசாங்கத்துடன் இருந்தாலும் முஸ்லீம் காங்கிரஸை கட்டி எழுப்ப முடியாமல் அக்கட்சி சின்னாபின்னமாகியது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தின் இருபதுக்கு மேற்பட்ட பல்லிவாசல்கள் தாக்கப்பட்டது.
அப்பொழுதே அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விட்டுவிட்டு முஸ்லீம் காங்கிரஸை பெலப்படுத்தியிருக்க வேண்டும். தம்புள்ள பல்லிவாசல் உடைக்கப்பட்டமை, அனுராதபுர மல்வத்தொயா முஸ்லீம் பல்லி வாசல் அகற்றப்பட்டமை கிரான்ட் பாஸ், குருனாகல், தெஹிவல போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட பல்லிவாசல்கள் தாக்கப்பட்டமை முஸ்லீம் இனத்தவர்களுக்கும் அவர்கள் மதத்திற்கும் செருப்பாள் அடித்த செயல் போன்று அமைய பெற்றது.

அப்பொழுதே இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் சிந்திருத்திருக்க வேண்டும். இன்று வேறுவல, அலுத்கம பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் நால்வர் கொல்ளப்பட்டு நூற்றுக்கனக்கானோ காயமடைந்து சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இத்தருனத்திலும் கூட அவர்கள் பதவிகளை விட்டு இறங்கி வரும் அலவிற்கு எந்தவொரு அரசியல்வாதிகளும் இல்லை. கேட்டால் அரசாங்கத்துடன் இருந்து நாம் சாதிப்பொம் என்று கூறுகிறார்கள்.

ஓண்;றை சிந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலின் போது தமிழ் மக்களுடன் இனைந்து செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களுக்கு உறுதி மொழி அளித்தபொழுதிலும் அவர் தமிழினத்திற்கு துரோகம் செய்துவிட்டார்.

dummies1_CIஎவ்வாறு எனின் கடைசியாக அரசாங்கத்துடன் இணைந்ததுதான் அதன் விலைவு இன்று முஸ்லீம் சமூதாயத்தினர் அனுபவித்து வருகின்றனர். முஸ்லீம் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் நல்லவர்கள், ஆனால் அவர்களை வழிநடத்தும் அரசியல் வாதிகளே கெட்டவர்கள். தமது சொந்த நலன்கருதி ஆசனங்களை நிறப்பவுமே தற்பொழுது தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் திருந்திகொள்வதற்கு வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்றில் இரண்டு பெரும்பான்மையினால் வெற்றி பெற்று தமிழ்த் தேசியத்தினை நிலை நாட்டியுள்ளனுர். ஆதனால் இன்றும் அசைக்கமுடியாத ஒரு கட்சியாக இருந்து வருகின்றனர். ஆரசாங்கம் எத்தனையோ வழிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் பிரபாகரனின் போராட்ட உறுதி,

அவரின் தமிழ் தெசியத்தின் பற்று தமிழ் பேசும் மக்களை ஒன்று சேர்த்து வைத்தது. விடுதலைப் புலிகள் போராடிய காலகட்டத்தில் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் எத்தனையோ இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டனர்.

DSC067071இருந்தும் நாய் வாலை நிமிர்த்த முடியாததைப்போல் அவர்களுடைய செயற்பாடுகள் அமையப்பெற்றுவிட்டது. இதனால் இன்று கஷ்டப்படுவது முஸ்லீம் மக்கள் தான் முஸ்லீம் அரசியல்வாதிகள் அல்ல. மற்றும் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவது இக்கட்டுறைக்கு வலு சேர்க்குமெனலாம்.

இருந்து முல்லிவாய்க்கால் வரை தமிழ் இனத்திற்கு எதிரான போர் இலங்கை அரசினால் கட்டவில்த்து விடப்பட்டபொழுது அரசாங்கத்துடன் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்து மகிழ்ந்தவர்கள் தான் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள். இன்று பிரபாகரன் போராட்டம் பற்றியும் அவர் இந்த சர்வஅதிகாரத்திற்கு எதிராக போராடியதையும் தமது மதத்திற்கும் தமது இனத்திற்கும் பிரச்சினை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிறகுதான் அவர்கள் உணர்கிறார்கள்.

இன்று போராட்டம் இல்லை. தமிழர் பிரச்சினையை உலக அரங்கில் பிரபாகரன் ஒப்படைத்து விட்டு இன்று ஓய்வெடுக்கிறார். இன்று முஸ்லீம் அரசியல்வாதிகள் குழப்பமடைந்த நிலையில் இருக்கின்றனர்.

அரசாங்கத்தைப் பொருத்தவரையிலும் பொது பலசேனாவைப் பொருத்தவரையிலும் முஸ்லீம் இனத்தவர்கள் அல்க்ஹைதா போன்ற தீவிரவாதத்தை உறுவாக்கி பௌத்த நாட்டை சீர்குழைத்து பௌத்த மதகுருக்களை மதமாற்றி விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்கா அரசு அல்க்ஹைதா தாக்குதல் நடத்துவது போன்று இலங்கை மீது தாக்குதல் நடத்தலாம். இலங்கை விமானங்கள் கடத்தப்படலாம். இதற்கு முஸ்லீம்கள் மீது சிங்கள அரசு கைவைத்ததன் விளைவை அமெரிக்கா நிறுவப்போகிறது.Eelamurazu 227-1_Eelamurazu 227.qxd

மஹிந்த ராஜபக்ஷவைப் பொருத்தவரையில் முஸ்லீம்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தாலும் அமெரிக்காவின் பிரச்சினையை தீர்த்த வைக்க முடியாத நிலை தொன்றப்போகிறது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தமிழீழ போராட்டத்திற்கு எதிராக முஸ்லீம்களை முஸ்லீம் அரசியல்வாதிகளைப் பயன்படுத்திவிட்டு ஏணியை தள்ளிவிட்டு போன கதையே இது. இனியாவது முஸ்லீம் அரசியல் வாதிகள் உணர்வார்களா? இல்லையா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரணியன்

SHARE