கால்பந்து ரவுண்ட் – அப்: இங்கிலாந்து அணியில் புதுமுகங்கள் ஆதிக்கம்

581

பிரேசில் செல்லும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 23 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே முந்தைய உலகக் கோப்பையில் ஆடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இதில் 11 பேர் இங்கிலாந்து அணிக்காக பத்துக்கும் குறைவான ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட இளம் வீரர்களை அணியின் மேலாளர் ராய் ஹட்ஜ்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஃபிராங்க் லாம்ப்ர்ட் மட்டுமே வயதான வீரர். அடுத்த மாதம் அவருக்கு 36 வயது ஆகவுள்ளது. அதேபோல அணியில் இடம்பெற்ற இளம் வீரர் என்ற பெயரை 18 வயதாகும் லூக் ஷா பெற்றுள்ளார். ஜூன் 14-ம் தேதி இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இத்தாலியை எதிர்கொள்கிறது.

SHARE