கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள்.

461

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள்.

அவர்களுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருந்தது.

அதன் பின்னரும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்கள் என்றால்,இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE