கிழக்கு மாகாணத் தலைமைத்துவங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் புலி அமைப்பிற்கு ஆதரவாய் பேசிவந்த கி.மா.உ.பூ.பிரசாந்தன் இன்று மகிந்தவின் அடிவருடியாக

473

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது முடக்குவதற்கான முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பத்திரிகைகள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமும் மட்டுமல்லாது தொலைபேசிகள் மூலமும் அச்சமூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. கிழக்கு மக்களின் பாதிப்புக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதும் இயலாவிடில் ஆளுமை உள்ள சமூகத்தினை கட்டி எழுப்புவதுமே எமது இலக்கு. இவ் இலக்கை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பலை புரிந்து கொண்ட எவரும் ஜதார்த்தத்தினை உரைத்து இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

393498_230425743701768_336931050_n

மஹிந்த ராஜபக்~வின் மகிந்தச்சிந்தனையின் கீழ் நாடு செல்லும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் அரசுடன் இணைந்தே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றது. அதே வேளை தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் எத் தீர்மானங்களும் எழும் போதும் அதனை சீர்படுத்த உறுதியாக குரல் கொடுக்கும் என்பது வெளிப்படையானது.

மூடுமந்திரமாக உள்ளொன்று புறம் ஒன்று என்ற செயற்பாடுகள் எல்லாம் இல்லை. இவ்வாறான அபிவிருத்திகள் படிக்காத சிலர் சகோதர ஊடகங்களில் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிடுவதும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் அவதூறாக ஆயுததாரிகளாக சித்தரிக்க முற்படுவதும் கிழக்கு மாகாண தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது ஒடுக்கி அபிவிருத்திப் பணிகளுக்கும் கிழக்கு மக்களின் உரிமைக் குரல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாடு என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்481284_442953479115659_355886584_n

சில இணையத்தளங்களும் கிழக்கு மக்களை அடக்கி ஆளும் யுத்திகளையே இன்றும் கையாள முற்படுகின்றது. இதய புத்தியுடன் உள்ளக் கிடக்கைகளை தட்டிப்பார்ப்பதற்கு மாறாக கிழக்கு தமிர்களை மத்தளமாக பாவிக்கும் நிலையினை எந்த கிழக்கு தமிழனும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. கிழக்கு மாகாண சபை மூலம் எந்த உறுப்பினரும் சுயலாபம்கருதி பதவிகளுக்கு வந்தவர்களல்ல. கலங்கி நிற்பதற்கு சேவர்களாகவே வந்தவர்கள் கிழக்கு தமிழர்களின் சேவகர்களாகவே இருப்போம்.

யாருக்கும் அடிபணிந்து பெயருக்கும், பதவிக்கும் தமிழர்களை ஏமாற்றி ஆசனத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு வீண்வாதங்கள் எம்மக்களின் வலுவாக்கமே. நிலையான அபிவிருத்தியைத் தரும் என்பது உள்ளம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இதே போன்று கல்வி என்பதும் இன்று பணம் படைத்தவர்களில் பக்கம் சாயும் நிலை தோன்றிவருகின்றது. இந்நிலைமையினை மாற்றுவதற்கு வறிய மாணவர்களும் கல்வி கற்பதன் மூலமே திடகாத்திரமான யதார்த்தத்தினை புரிந்து கொள்ளும் சமூகத்தினை ஸ்திரப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புப் பணிமனையில் பெற்றபோது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இக் கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி அமைப்பு பிரதிநிதிகள் ஆசிரியர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்

TPN NEWS

SHARE