குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கல்லாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடுரம்!!

488

 

பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் நின்று இருந்தார். அப்போது அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால் அவரின் தலையில் தாக்கினர் .

இதில் அந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்ட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாக பொலிஸ் அதிகாரி உமர் சீமா தெரிவித்து உள்ளார்.

அவரது தந்தையைத் தவிர பெண்ணை தாக்கிய அனைவரும் தப்பியோடிவிட்டனர். அவரது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப கௌரவத்தை காப்பாற்ற என்று பெண்களைக் கொலை செய்வது என்பது என்பது பாகிஸ்தானில் நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல். இது குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.

SHARE