குறைந்த விலையில் அறிமுகமாகும் BlackBerry Z3 கைப்பேசியின் Jakarta பதிப்பு

686
பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான BlackBerry ஆனது Foxconn நிறுவனத்துடன் 5 வருட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன்படி இரு நிறுவனங்களும் இணைந்து அறிமுகம் செய்த முதலாவது கைப்பேசியாக BlackBerry Z3 கைப்பேசியின் Jakarta பதிப்பு விளங்குகின்றது.

நாளைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியின் விலையானது 200 டொலர்கள் மட்டுமே ஆகும்.

BlackBerry 10.2.1 இயங்குதளத்தில் செயற்படவுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 650 x 960 Pixel Resolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual Core Processor, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

SHARE