கைத்துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 28 வரை விளக்கமறியல்

88
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா
கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்  28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (13) இரவு நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த இளைஞனை 14/03 அன்று நோர்வூட் பொலிஸார் அட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி  எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  இராணுவத்தில் கடமையாற்றி எழு மாதங்களுக்கு முன்னர் விலகியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE