கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

25

 

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைதினம் (02.10.2023) இடம்பெற்றுள்ளது. 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE