நல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியும் மற்றும் கடைத் தொகுதியும் இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினாலும் திறந்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில நடை பெற்ற இந்நிகழ்வில் பெயர்ப் பலகையை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் திறந்து வைக்க, நினைவுக் கல்லை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினாகளான அனந்தி சசிதரன், கஜதீபன் அனோலட் மற்றும் வலி வடக்கு, வலி தென் மேற்கு, வலிமேற்கு சாவகச்சேரி பிரதேச சபைகளின் தலைவர்கள், உள்ளராட்சி உதவி ஆணையாளர், யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட மற்றும் பொது மக்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.