ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத் கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் பரத் படிப்பறிவு இல்லாததால் அவரை நண்பர்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பரத்துக்கு தெரியவர, இதிலிருந்து தப்பிக்க படித்த பெண்ணை கல்யாண செய்து கொள்ளலாம் என நினைக்கிறார். அது எப்படி நடக்குது என்பதே கதை. இதில் நந்திதா தம்பிராமையாவின் மகளாக நந்தினி கேரக்டரில் வர, பரத்துக்கு நந்தினியை பார்த்ததும் அவர் மீது காதல் ஏற்படுகிறது. படம் முழுக்க நகைச்சுவை இருந்தால் வெற்றி பெற முடியும் நம்பிக்கையில் தான் இப்படம் தயாராகிறது. இதில் தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, மதன்பாப், சாம்ஸ் உட்பட பல காமெடியன்கள் இருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்குகிறார்.