சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளிக்காத இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும்
இலங்கையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற அரசியல் வாதிகளும், அரசியல் பலம் கொண்டவர்களும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.
ஆனால் தேங்காய் திருடியவர்களும், சுத்தமான குடிநீர் கேட்டவர்களுமே சட்டத்தின் முன்னால் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொள்ளைகள், திருட்டுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன நாட்டில் அதிகரித்துள்ளமைக்கு இவ்வாறான சட்ட ஒழுங்கு சீரின்மையே காரணமாக இருக்கிறது.
ஆனால் மறுபக்கத்தில் பாரிய அபிவிருத்திகளை காட்டி, இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அரசாங்கம் மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது.
எவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்ட ஒழுங்குளை மதிக்காத அரசாங்கத்தினால் இலங்கையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியாது .