கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அரசியலுக்குள் வருவதற்கே கோத்தபாய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார்.

376

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் வருகைக்கான ஆரம்ப நடவடிக்கை இன்று இரவு அவரது வீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கோட்டே தொகுதியின் அமைப்பாளராக மாத்திரமல்லாது, கொழும்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அரசியலுக்குள் வருவதற்கே கோத்தபாய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அவரது அரசியல் வருகை தொடர்பான அறிவிப்பை முதல் முறையாக வெளியிட்டு, கொழும்பு நகரின் அரசியல் குறித்த அக்கறையை கொண்டுள்ள முன்னணி வர்த்தகர்கள், பாதுகாப்பு பிரதானிகள், அரசியல்வாதிகளுக்கு கோத்தபாய தனது வீட்டில் இராபேசன விருந்தொன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த இராப்பேசன விருந்துக்கு பாதுகாப்புச் செயலாளரின் நெருங்கிய ஆதரவாளரான திலித் ஜயவீர என்ற வர்த்தகர் அனுசரணை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர்கள் எவரும் இந்த விருந்துக்கு அழைக்கப்படாதது முக்கிய அம்சம் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

SHARE