கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து 

374
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் லண்டன் நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தில் பங்கேற்றார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக நியூசிலாந்தில் வலம் வந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணைய தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

 

இதிலிருந்து திசை திருப்ப விராத் கோஹ்லி மீண்டும் ஷாம்பு விளம்பரத்தில் நடித்தபோது இலியானாவுடன் இணைந்து நடித்தார். இதையடுத்து அனுஷ்காவுடன் விராத்தை இணைந்து பேசும் பேச்சில் சூடு குறைந்தது. இந்நிலையில் மீண்டும் விராத்&அனுஷ்கா நள்ளிரவு விருந்தில் பங்கேற்ற தகவல் வெளியாகி உள்ளது. தில் தடக்னே தோ என்ற இந்தி பட ஷூட்டிங்கிற்காக அனுஷ்கா துருக்கி சென்றார். தற்போது விராத் கிரிக்கெட் மேட்சில் பங்கேற்க லண்டன் சென்றிருக்கிறார்.

 

இதையறிந்து துருக்கியிலிருந்து கடந்த ஞாயிறன்று லண்டன் வந்தார் அனுஷ்கா. பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலுக்கு இருவரும் சென்றனர். சக கிரிக்கெட் வீரர்கள் இதே ஓட்டலில் இரவு விருந்தில் கலந்துகொண்டனர். ஆனால் விராத் மட்டும் தனது காதலி அனுஷ்காவை தனியாக அழைத்து சென்று அவருடன் இரவு விருந்து சாப்பிட்டார். இருவரும் கறுப்பு நிற காஸ்டியூம் அணிந்திருந்தனர்

 

SHARE