சச்சின் உருவம் பொதித்த வெள்ளி நாணயங்கள்!!

824

Sachin

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சச்சினின் முகம், பெயர் மற்றும் கையெழுத்து அடங்கிய 15,921 வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகிறது.

சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளவர், மொத்தம் 15,921 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதனை நினைவுபடுத்தும் வகையில் தனியார் நகைக்கடை ஒன்று வெள்ளி நாணயங்களை, நாளை (14ம் திகதி) வெளியிட உள்ளது.

இந்த நாணயத்தின் மேற்புறத்தில் சச்சின் பெயர், கீழே 200வது டெஸ்ட்- 2013 என எழுதி, நடுவில் இவரது முகம் பதிக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே 10, 20 கிராம் எடையில் நாணயங்கள் உள்ளதால், இது 200 கிராம் எடையில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

SHARE