சட்டத்தின் கீழான கசினோ சூதாட்ட சட்டத்தை எதிர்த்து ஜாதிக ஹெல

469

செயல் நுணுக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கசினோ சூதாட்ட சட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஜாதிக ஹெல உறுமயவை பாராட்டுகின்றோம். அவர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர் என பொதுப ல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் கசினோ சட்டத்தை அமுல்படுத்துமா அல்லது தடை செய்யுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டையும் மக்களையும் பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஜாதி ஹெல உறுமய எடுத்த தீர்மானமானது பாராட்டுக்குரியது. அவர்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டுள்ளனர்.

 

 

 

SHARE