சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது மனைவியுடன் கடந்த காதலர் தினத்திலன்று 14 பிப்ரவரி 2014 அன்று சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

408

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பிரபல இடது கை துடுப்பாட்டாக்காரரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் தெரிவிய வருவதாவது,

எனது பெயர் கசுன் தனுஷ்க வேலாரத்ன எனது மனைவியின் பெயர் ரதீஷா வேலாரத்ன இலங்கை விமான சேவையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார்.

சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது மனைவியுடன் கடந்த காதலர் தினத்திலன்று 14 பிப்ரவரி 2014 அன்று சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் இடம் பெற்றபோது சனத் ஜயசூரிய தனது அதிகாரபூர்வ கடமைகளை நிறுத்திவைத்து விட்டு எனது மனைவியை லண்டனுக்கு வரவழைத்து லண்டன் டொக்லான்ட் நகரத்தின் கிராஞ்ச் ஹோட்டலில் அவர்கள் உல்லாசமாக தங்கியிருந்து எனக்கு தெரியும் அவற்றை என்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவும் முடியும்.

அத்துடன் எனக்கு 4 ½, 2 ½ வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களை பராமரிக்கவும் எனது அலுவலக வேலைகளில் ஈடுபடவும் எனக்கு கடினமாக உள்ளது. இதனால் நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ஆகவே அவரிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இதேவேளை மருதானை பொலிஸார் இவரது மனைவியிடம் தொலைபேசியில் விசாரணைக்காக பலமுறை அழைத்திருந்தனர்.ஆனால் மனைவி விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.

பின்னர் நுகேகொட சிறுவர் பெண்கள் விசாரணைப்பிரிவில் முறைப்பாடு செய்தார் வேலாரத்ன. அவர்கள் விசாரணைக்கு அழைத்து விசாரணை செய்தபோது நான் தற்போது கொழும்பு  தும்முல்லையில் அமைந்துள்ள சனத் ஜயசூரியவின் வீட்டிலே வசிக்கின்றேன்.எனவும் வேலாரத்தவிடம் இருந்து நான் விவாகரத்து பெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மருதானை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை பதிந்த பொலிஸ் கொஸ்தாபல் (PC-33963) சனத் ஜயசூரியவின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதுடன் அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் குறிப்பிடத்தக்கது.Sanith

SHARE