உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் பிரச்சினையானது தொடர்கதையாகவே இன்னமும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் எறி கணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறி கணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது.
இவ்வாறு இலங்கை தொடர்பாக ஐ.நா அறிக்கையை தயாரித்த ஆயுசு ணுருமுஐ னுயுசுருளுஆயுN அமெரிக்காவை தளமாகக் கொண்ட வுhந நேற லுழசம வுiஅநள ஊடகத்தில் (சுநஎளைவைiபெ ளுசi டுயமெய’ள டீடழழனல றுயச) எழுதியுள்ளார். இலங்கையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது 2009 ல் நிறைவுக்கு வந்ததிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை திசை திருப்பியிருந்த இலங்கை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத் தொட ரில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியிருந்த உறுப்பினர்கள் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் அகப்பட்டுத் தவித்த இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறுகிய, ஒடுங்கிய கரையோர, சதுப்பு நிலப்பகுதி ஒன்றில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்தது.
தீவிரவாத தாக்குதல் உத்திகள் பலவற்றைக் கையாண்டு தாக்குதல்களை நடாத்தியிருந்த புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிக்கப்பட்டது. இவ் யுத்த காலப்பகுதியில், இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தினர் வெற்றிகளைக் குவித்திருந்த போதிலும் கூட, தமிழ்ப் பொதுமக்கள் பெரும ளவில் இவ்வெற்றிக்கு விலையாகக் கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பல அவதா னிகள் மிக மோசமான யுத்த மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது இலங்கை பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டியதுடன், பரிந்துரை ஒன்றையும் மேற்கொண்டிருந்தது.
இக்காலப்பகுதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் நாட்டில் இடம்பெற்ற யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதாக உறுதிப்பாடு வழங்கியிருந்தார்.ஆனால் இவ்வாக்குறுதி வழங்கப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இலங்கை ஜனாதிபதி அதனை நிறைவேற்ற எந்தவொரு நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதுடன், அது தொடர்பான இலங்கையின் பதிலையும் அறிக்கை வடிவில் தருமாறு ஜஆயுசுணுருமுஐ னுயுசுருளுஆயுஸே உட்பட மூவர் கொண்ட குழுவிடம் கேட்டுக் கொண்டார்.
இதன் பிரகாரம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான உண்மைகளை நாம் கண்டறிந்து அறிக்கையாக தயாரித்தோம். எமது விசாரணையின் முடிவில், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் சட்ட விதிமுறை களை திட்டமிட்ட வகையில் மீறி நடந்து கொண்டதற்கான நம்பகமான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் நாம் கண்டுகொண்டோம்.
இரு தரப்புக்களும் யுத்த விதிமுறைகளை மீறியதால் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர் என்ற உண்மையையும் நாம் கண்டறிந்து கொண்டோம். அதாவது லிபியா அல்லது சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையின் பல மடங்காக இது காணப்படுகிறது. இவ்வாறு இலங்கையில் கொல்லப்பட்ட மக்களில் பெருமளவானவர்கள் இலங்கை அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட செறிவான எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதலின் போதே படுகொலைசெய்யப்பட்டனர். இதில் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையான ஆணைக்குழுவின் ஊடா கவோ அல்லது குற்றவியல் விசார ணைகள் மூலமோ கற்றறியப்படாமல், இவற்றை விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கமானது ‘கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை’ உருவாக்கிக் கொண்டது. இலங்கையின் யுத்த களத்தின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்ததென்பதை மூடிமறைப்பதற்கான பொறிமுறைகளைக் கொண்டதாகவே இவ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
கடந்த நவம்பரில் இவ் ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையை வெளியிட்ட போது, எமது அறிக்கையின் இறுதித்தீர்வுகளைக் கூட கவனிக்கத் தவறியுள்ளது அல்லது அதனை அசட்டை செய்துள்ளது. அத்துடன் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக எம்மால் கண்டறியப்பட்ட காரணங்களையும் இவ் ஆணைக்குழு தனது அறிக்கையில் திருத்தி வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாம் எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது.
இவ் ஆணைக்குழுவின் விசா ரணை அறிக்கை வெளிவந்த பின்னர், அதன் பரிந்துரையின் படி தற்போது யுத்த கால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கமானது இராணுவ அதிகா ரிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளது. இவ்விருசாரரும் பல பத்தாண்டுகளாக இலங்கை ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மீறல்களை தமது கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளனர். இந்நிலையில் நீதியை நிலைநாட்டத் தவறிய இராணுவ மற்றும் வழக்கறிஞர்கள் தற்போது இராணுவத்தினரின் யுத்த மீறல்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வரவேற்கத்தக்க சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தம் தொடரப்பட்டதற்கான அடிப்படைக் காரணிகள் எவை என்பதை இவ் ஆணைக்குழு கற்றறிந்து கொண்டுள்ளது. அத்துடன் பொது மக்களின் இழப்புக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் தமி ழீழ விடுதலைப்புலிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையானது உண்மை, நீதி என்பவற்றை நாட்டில் நிலை நாட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்குவதுடன், தடுப்பில் உள்ளவர்களை விடுவித்தல் மற்றும் அரச அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எம்மால் முன்வைக்கப்பட்ட விடயத்திற்கு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையின் மூலம் மேலும் வலுச்சேர்த்துள்ளது. ஆனால் இலங்கையில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.
இலங்கை அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உண்மையான, நீதியான தீர்வை எட்டுவதுடன், உரிய வகையில் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமெரிக்காவால் உருவாக்கப்படும் பிரே ரணை ஒன்றுக்கு ஐ.நா மனித உரி மைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் தமது ஆதரவை நல்குவதற்கான வழி வகைகள் தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது. இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவையானது தனது நகர்வை மேற்கொள்வதற்கு அமெரிக்கா முன்னின்று செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது 2009ம் ஆண்டிலிருந்து தான் கொண்டுள்ள குழப்பநிலையை தீர்ப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும்.
இவ்வாறானதொரு கோரிக்கை மட்டும் போதுமானதல்ல. நாம் எமது அறிக்கையில் பரிந்துரைத்ததன் படி, இலங்கையில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை பேரவையானது உருவாக்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் வெற்றி பெற்றுக் கொண்டவர் என்பதை விடுத்து, உண்மையான பொறுப்புக் கூறல் என்பதைக் கண்டறியவேண்டியது இன்றியமையாததாகும். தென்னாபிரிக்கா, சியாராலியோன், ஆர்ஜென்ரினா போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு இலங்கை விடயமும் கையாளப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற படு கொலைகள் தொடர்பில் அனைத்துலக சமூகமானது போதியளவு ஆர்வத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தொடர்ந்தும் இவ்வாறானதொரு சூழலை கவனத்திற் கொள்ளாது, அசட்டையாக இருந்து விட முடியாது, இந்த விவகாரத்தை மன்னித்து விடவும் முடியாது. இலங்கை அரசாங்கமானது தனது எல்லா மக்களுக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் தனது மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தனது கடப்பாட்டை அனைத்துலக சமூகமானது தட்டிக்கழிக்காது, அதனை நிறைவேற்ற வேண்டிய காலம் இதுவாகும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக விவகாரங்களுக்கான பிரி வின் பொறுப்பாளர் னுழசழவால டீலசநெ தெரிவித்துள்ளார். 40,000 க்கும் மேலான அப்பாவிப் பொதுமக்கள் மீதான இனப் படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக விவகாரங்களுக்கான பிரி வின் பொறுப்பாளர் னுழசழவால டீலசநெ தெரிவித்துள்ளார்.
இவ்வகையான கொடுமை களை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நிர்வாண மாக்கப்பட்ட நிலையில் பெண்களின் உடல்கள் வாகனத்தில் இழுத்து ஏற்றப்படுகின்றன. இழுத்து ஏற்றப்பட்ட ஒவ்வொரு பெண்களையும் இலங்கைப் இராணுவத்தினர் இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல் குதூகலித்தும் சிரிக்கின்றனர். அப்பெண்களின் கைகள் கட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலை யில் காணப்படும் அப் பெண்களின் உடல்களைப் பார்த்து இலங்கை இராணுவம் சிரிக்கும் காட்சிகளை ஏனைய இராணுவத்தினர் படம்பிடிக்கின்றனர். கொல்லப்படுவதற்கு முன்னர் அப்பெண்கள் இலங்கைப் படையினரால் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. கை தொலைபேசி மூலம் பிடிக்கப்பட்ட படத்தின் மற்றுமோர் காட்சியில் ஒரு பெண் மண்டியிட்டு மன்றாடும் காட்சியும் அதேவேளை அவரை எப்படி கொல்ல வேண்டும் என இராணுவம் உத்தரவு இடுவதும் பதிவாகியுள்ளது. கொல்லப்பட்ட அப்பெண்ணின் மூளை வெளியில் தென்படுவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகளை வெட்டி எடுத்தல், படுகொலைகள், பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற காட்சிளைப் பிரித்தானியத் தொலைக்காட்சியில் காண நேரிடுமென நான் ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. இந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு நான் உங்களை தூண்டவில்லை. அக்காட்சிகள் மிகவும் கொடூரமானவை. அந்தப் படங்கள் உங்கள் மனங்களில் பதிந்து நிற்கக்கூடியவை. சில வேளைகளில் பல ஆண்டுகளாக மனதில் பதிந்து நிற்கக்கூடியவை. எனது தலையிலிருந்து அவற்றை இறக்கி வைக்க என்னால் முடியவில்லை.
கொடூரமான படங்கள் இறுதிப்பகுதியில் அதிகம் இடம்பெறுகின்றன. ஆயினும் செய்திக் காட்சிகளில் கூட அச்சமூட்டத்தக்க காட்சிகளைப் பார்க்க முடியாத பல வளர்ந்தவர்களும் இந்தக் கொடூரத்தைப் பார்க்க மாட்டார்கள். நான் இதனை ஒருபோதும் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். மொத்தத்தில் நாங்கள் இதனை ஒளிபரப்ப வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் போருக்குப் பின்னரும்; போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைச் இலங்கை அரசாங்கம் புரிந்திருப்பதற்கான வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
40,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக நிபுணர்கள் குழு நம்புகின்றது. பாரிய அளவிலானதொரு போர்க்குற்ற விசாரணைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களையோ, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையே இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் இலங்கை இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளைப் கை தொலைபேசி மூலம் படம்பிடித்து பதிவு செய்துள்ளனர்.
இலங்கை படையினரால் கைத் தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட காணொளிகளே மிக மோசமானவை. கைதிகளைக் கொடுமைப்படுத்துவதை அவர்கள் படம் பிடித்துள்ளனர். காணொளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றில் குழிகளிலும், நீண்ட வரிசைகளிலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் காணப்படுகின்றன. பலர் கட்டப்பட்ட நிலையிலும், பலர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர்.
எறிகணை வீச்சிலோ அன்றி ‘போர் நியமங்களுக்கு உட்பட்ட டநபயட றயசகயசந நடவடிக்கைகளிலோ கொல்லப்பட்ட உடலங்களாக அவை தெரியவில்லை. ஒரு சிறு குழு சிறுவர்களின் உடல்கள் குழியில் காணப்படுகின்றன. கைதிகள் உயிருடன் காணப்படுகின்றனர். சில கைதிகள் இம்சைப்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டும் காணப்படுகின்றனர். தமிழர்களால் எடுக்கப்பட்ட காணொளி பெரும் கவலை தருவதாக உள்ளது. அவற்றில் மருத்துவமனைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் திட்டமிடப்பட்டுத் தாக்கப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
போர்க்குற்றங்கள் மற்றும் போரின் பின்னான படுகொலைகள் தொடர்பான காணொளிகள் போலியானவை என இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. காணொளி தடய நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்பட்டவற்றையும் இலங்கை அரசாங்கம் மறுத்து வருகின்றது. விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
விடுதலைப் புலிகளும் மக்களைக் கொன்றுள்ளார்கள். ஆனால் 40,000 பொது மக்களை அவர்கள் கொல்லவில்லை. வேறு சக்தியே இத்தனை ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தது. படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையை இங்குள்ள அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என இந்த ஆதாரங்கள் உங்களைச் சிந்திக்க வைக்கும்’ என சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலகவிவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் னுழசழவால டீலசநெ தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜெனிவாத் தீர்மானம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
– மறவன் –