சர்ஜரி மூலம் காதலன் பெயர் டாட்டூவை அழித்த தீபிகா 

463

தீபிகா படுகோன் தனது மாஜி காதலன் டாட்டூவை அழித்தார். நடிகை நயன்தாரா மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஜோடிகள் பிரிந்தபோதும் நயன்தாரா இன்னும் டாட்டூவை அழிக்கவில்லை. அதை அழிக்க முடியாதபடி கையில் பச்சை குத்திவிட்டதால் அவர் இப்போது தவிக்கிறார். மதராசபட்டினம் பட ஹீரோயின் எமி ஜாக்சனும் தனது மாஜி காதலரான பாலிவுட் ஹீரோ பிரதீக் பப்பர் பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். ரன்பீர் பெயரை கழுத்துப்பகுதியில் தீபிகா பச்சை குத்திக்கொண்டார். இந்நிலையில் ரன்பீருக்கும், கேத்ரினா கைப்புக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதில் மனம் உடைந்தார் தீபிகா.
ஆனாலும் பச்சை குத்திக்கொண்ட ரன்பீர் பெயரை அழிக்காமல் படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் குளிர்பான விளம்பர படமொன்றில் நடிக்க வந்தார் தீபிகா. அவரது கழுத்தை அங்கிருந்தவர்கள் உற்று பார்த்துக்கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபோது, கழுத்தில் பச்சை குத்தியிருந்த ரன்பீர் பெயர் காணவில்லை அதனால் பார்க்கிறோம் என்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ரன்பீர் பெயரை நயன்தாரா போலவே அழிக்க முடியாத டாட்டூவாக வடிவமைத்திருந்தார் தீபிகா. சர்ஜரி மூலம் மட்டுமே அதை அழிக்க முடியும் என கூறப்பட்டதாம். இதனால் அவர் சர்ஜரி செய்து டாட்டூவை அழித்திருப்பதாக பாலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது

SHARE