சர்வதேச நிதியத்தின் தலைவராக தமிழர் நியமிக்கப்படுவாரா

644

சர்வதேச நிதியத்தின் அடுத்த, நிர்வாக இயக்குனராகும் வாய்ப்பு, சிங்கப்பூரை சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பண பட்டுவாடா முறையை சீர் செய்ய, சர்வதேச நிதியம், 1945ல் துவக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருப்பவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, கிறிஸ்டின் லாகார்டே. கடந்த 2011ல், இந்த பொறுப்புக்கு வந்த லாகார்டே, 2016 வரை அப்பதவியில் இருப்பார். அவருக்குப் பிறகு, அந்த உயரிய பொறுப்புக்கு வருபவர் யார் என்பதற்கான ஆய்வு, இப்போதே துவங்கியுள்ளது. இதில் முந்திக் கொண்டுள்ள, ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், தன் நாட்டின் நிதியமைச்சரான, தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனராக தர்மனை, பொறுப்புக்கு வருவதற்கான தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச அளவில் அறியப்படும் நபராகவும் அவரை மாற்ற, முயன்று வருகிறது சிங்கப்பூர். சர்வதேச நிதியத்தின் ஒரு அங்கமான, சர்வதேச ஆலோசனை கவுன்சிலின் பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பொறுப்பில், தர்மனை, சிங்கப்பூர் நியமித்துள்ளது. உலக நாடுகளின் மிக பிரபல தொழிலதிபர்கள் அங்கம் வகிக்கும் இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக, தர்மன் இருப்பார். இந்த இரண்டாண்டு காலத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம், சர்வதேச அளவில் புகழ்பெறுவார். அதன் பிறகு, சர்வதேச நிதியத்தின் தலைவராக, இரண்டாண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூர் ரிசர்வ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ள தர்மன், அந்நாட்டின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்

SHARE