சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தல் இம்மாத இறுதியில்!

778

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்தப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி விசாரணைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும்? அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்பட வேண்டும் போன்ற காரணங்கள் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையத்தினால் ஆராயப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே விசாரணை ஆணைக்குழு தொடர்பில் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்காக 1.460,000 டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE