சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னரையும், அவரது அரசின் கொள்கைகளையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்கள், பொது மேடைகளில் பிரசாரம் செய்தவர்கள், சுவரொட்டி மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்து தெரிவித்தவர்கள் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டுடன் கடந்த 2012-ம் ஆண்டு சவுதி ராணுவத்தினரால் அடித்து, உதைத்து கைது செய்யப்பட்ட ஷியா பிரிவினரின் தலைவரான ஷேக் நிம்ர் அல் நிமிர்,
அல் செய்யெத் மொர்ட்டாஜி அல் அலாவி, ஃபாசில் ஹலால் அல் ஜமி, ஹசன் அஹ்மத் அல் அயீத், அலி ஜலான் அல் ஜரவ்டி, முக்கல்லாஃப் தஹம் அல் ஷெம்ரி, மொர்ட்டாஜி அபு அல் சவ்த், ஹொசைய்ன் அலி அல் கர்பரி ஆகியோர் சவுதியின் குறிப்பிடத்தக்க பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.