சாம்பார் சாப்பிட்ட நால்வர் மரணம்

89
விருத்தாச்சலத்தை அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60), இவரது மனைவி கொளஞ்சியம்மாள்.
இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் இருக்கிறார், இவரது மனைவி கீதா, இவர்களுக்கு 12 வயதில் அகிலேஷ்வர் என்ற மகனும், 6 வயதில் சரவணகிருஷ்ணன் என்ற மகனும் இருக்கின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 29ம் திகதி கொளஞ்சியம்மாள் வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார், இதனை கணவர் சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணகிருஷ்ணனும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவர்கள் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு முடித்ததும் கொளஞ்சியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் உடல்நலம் குன்றிப்போக பக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதும் சரவணகிருஷ்ணன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனும் உயிர் பிழைத்தனர்.
மற்றவர்களுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், கீதா என்பவருக்கும் ஹரிஹரன் என்பருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.
இதனையறிந்து கொண்ட கொளஞ்சியம்மாள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனிடம் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மாமியாரை கொல்வதற்காக முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்துள்ளார், இதனை சாப்பிட்ட மற்றவர்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து கீதா மற்றும் ஹரிஹரனை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
SHARE