சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா அணி 2-வது வெற்றி

396
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர். லாகூரின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய கொல்கத்தாவுக்கு ராபின் உத்தப்பாவும் (46 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் கவுதம் கம்பீரும் (60 ரன், 8 பவுண்டரி) நேர்த்தியான தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் மிடில் வரிசை வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஆனாலும் போராடி கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே சென்னையை தோற்கடித்து இருந்தது. அத்துடன் ஐ.பி.எல்-யும் சேர்த்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அந்த அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும்.

SHARE