சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக உள்ள விஜய் ஆண்டனி

13
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜய் ஆண்டனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் முதல்முறையாக விபத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்டரில் கூறியதாவது:
அன்பான நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட கடுமையான விபத்தினால் ஏற்பட்ட தாடை மற்றும் மூக்கு தற்போது பத்திரமாக மீட்கப்பட்டது. பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடன் பேச உள்ளேன். என்னுடைய உடல் நலத்தில் அக்கறை காட்டியதற்கும் ஆதரவாக இருந்ததற்கும் அனைவருக்கும் நன்றி.
SHARE