சிட்சிபாஸ், கோர்டா காலிறுதிக்கு முன்னேற்றம்

15

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-4, 6-4 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை சிட்சிபாஸ் 6-3 கைப்பற்றினார்.

இறுதியில், சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் கோர்டா 3-6, 6-3, 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

maalaimalar

SHARE