சிம்புவை வெறுப்பேற்றும் ஹன்சிகா!

602

சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார்.
குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம லூட்டி அடிக்கிறார் ஹன்சிகா. அதிலும் தற்போது மீண்டும் அவருடன் மீகாமன் படத்தில் இணைந்திருப்பவர், தற்போது தனக்கு கட்டுக்காவல் ஏதுமில்லை என்பதால், ஹாயாக சுற்றிக்கொண்டு திரிகிறார்.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் ஒரே கூத்தும் கும்மாளமுமாகத்தான் இருக்கிறார்களாம். சில நாட்களில் இரவு படப்பிடிப்பு என்றால் கேரவனுக்குள் சென்று குட்டித்தூக்கம் போடாமல் ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி தூங்கி விழுகிறார்களாம். அப்படி தான் ஆர்யா மீது சாய்ந்து கிடப்பதை தனது உதவியாளர்களை வைத்து செல்போனில் கிளிக் செய்ய வைத்து, அதை தனது டுவிட்டரிலும் வெளியிடுகிறார்.
இதை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி செய்யவில்லை. சிம்புவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்கிறாராம்
H0329
p16a(1)
SHARE