சிரியா நபரை கொடூரமாக கொலை செய்த பிரிட்டிஷ் தீவிரவாதிகள்

639

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் உதவிசெய்து வருகின்றனர். இவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள இஸ்லாமியவர்கள் ஆவார்.

இந்நிலையில், இந்த தீவிரவாதக்குழுவினர், சிரியா பாலைவனத்தில் ஒரு நபரை முழங்காலில் முட்டி போட வைத்து கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளியில், அந்த நபரின் கால் மற்றும் கைகள் கட்டப்பட்டு, தலையை கீழே குணியவைத்து, துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த காணொளி குறித்து சர்வதேச மையத்தின் தலைவர் ஜோசப் கார்டர் கூறுகையில், இந்த காணொளியில் AK-47 துப்பாக்கி வைத்துள்ள நபர், இதற்கு முன் ரஹத் அல் தவித் குழுவின் காணொளியில் தென்பட்டதாகவும், அந்த குழுவில் நான்கு பிரிட்டிஷ் சகோதரர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதில் இருவர் வழக்கமாக கருப்பு நிற கை கடிகாரங்கள் அணிவதாகவும், அந்த குழுவில் இவர்களிடம் மட்டுமே இந்த கடிகாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான கொலை சம்பவங்கள் அரங்கேறிய பின், இவர்கள் இந்த காணொளியினை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

SHARE