சிறிய ரக விமானம் விபத்து: 4 பேர் உயிரிழப்பு! ஆஸ்திரியாவில் சம்பவம்

41

 

மேற்கு ஆஸ்திரியாவில் உள்ள பகுதியொன்றில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடும் பனிப்பொழிவான மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த 4 பேரையும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.விபத்துக்கான காரணமும் இன்னும் அறியப்படாத நிலையில், விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும் ஆஸ்திரிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE