நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளுடன் 4323 சார்ஜர்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்களின் மொத்த எடை 367 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது