சிவசக்திஆனந்தன்தலைமையில் இறந்த போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வவுனியா சிந்தாமணிபிள்ளையார் கோயிலில் தடைகளையும் தாண்டி பிராத்தனை

558

 

சிவசக்திஆனந்தன் தலமையில்  இறந்த போரளிகளுக்கும் பொதுமக்களுக்கும்
வவுனியா சிந்தாமணிபிள்ளையார் கோயிலில் தடைகளையும் தாண்டி பிராத்தனை
இன்று {18-05-2014} பிற்பகல் 2.45  மணியளவில் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் அமைச்சர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன்வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாயக்கால் நினைவு தினத்தில் தீர்மானம் முள்ளிவாய்காலில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இந் நாளை தேசிய துக்கநாளாக பிரகடனப்படுத்தி அடுத்த வருடம் அனைவரும் ஒன்றிணைந்து அனுஸ்டிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

. வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இன்றை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று (18.5) மாலை 2.45 மணிக்கு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறு;பிபனரின் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சிந்தாமணி பிள்ளையார் கோவிலை சென்றடைந்து அங்கு தீபமேற்றி வழிபட்டிருந்தனர்

. அதனையடுத்து மிண்டும் பராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இந் நிகழ்வுகளை புலனாய்வு பிரிவினர் சூழ நின்று படம் பிடித்துக்கொண்டீரந்தனர். இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி. சிவமோகன், இ. இந்திரராஜா, எம். தியாகராஜா, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்காளன க. பரமேஸ்வரன், எஸ். பாபு, ரி, கண்ணன், எஸ். தர்மலிங்கம், கே. முகுந்தன், எஸ். பார்த்தீபன், வவுனியா தெற்கு கல்வி கோட்டக்கல்வி அதிகாரியும் மாகாணசபை வேட்பாளருமான எம். பி. நடராஜா ,  தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள், புதிய மாக்கிஸிச லெனிசிசக்கட்சியின் உறுப்பினர்கள், பிரஜைகள் குழுவின் உறுப்பினர்களான எஸ். தேவராஜா, அருட்சகோதரர் செபமாலை உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மக்கள் சகிதம் கலந்துகொண்டு சிறப்பிப்பதை படத்தில் கானலாம்.

 

 

 

IMG_5533

IMG_5530

 

IMG_5551

 

IMG_5523 IMG_5534

 

IMG_5555

 

IMG_5523

IMG_5533 IMG_5526

 

SHARE