சீனாவின் அடாவடியால் ஆசியப் பிராந்தியத்தில் போர் மூளும் ஆபத்து?

422

அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா

அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தெற்கு திபெத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என்று சீனா கூறியுள்ளது. முற்றிலும் இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வரும் சீனா அம்மாநில மக்களுக்கு சிறப்பு விசா வழங்கி வருகிறது. இது தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில் சீன அரசு வெளியிட்டுள்ள வரைபடம் பதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இதே போல் வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சொந்தமான கடற்பகுதிகள் சீன வரைபடத்தில் சேர்க்கபட்டதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வரைபடத்தை வாபஸ் பெறாவிட்டால் தாங்களும் புதிய வரைபடத்தை வெளியிடுவோம் என்று பிலிப்பைன்ஸ் அரசு எச்சரித்துள்ளது. சீனாவின் போக்கிற்கு வியடநாம் அரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் சீன மக்கள் தங்கள் நிலப்பரப்பை முழுமையாக தெரிந்துகொள்ளவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதற்காக மட்டுமே புதிய வரைபடம் வெளியிடபட்டுள்ளதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.

சினா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் ஆசிய பிராந்தியத்தில் போர் மூளும் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு சீன கடலில் உள்ள சில பகுதிகள் தொடர்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சீனா ஏற்கனவே மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE