சீனாவில் சுரங்க அதிபருக்கு மரண தண்டனை

497

சீனாவை சேர்ந்த சுரங்க தொழில் அதிபர் லியூ ஹான். சீனா தவிர இவருக்கு ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சுரங்கங்கள் உள்ளன. இதற்கிடையே இவர் பல குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு எதிரிகளை கொன்று குவித்ததாகவும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து பல கோடி சொத்து சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற சீன அதிபர் ஸிஜின்பிங் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அதை தொடர்ந்து இவர் சீனாவில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இருந்தும் இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கும், அவரது தம்பி லியூ வெய்க்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

SHARE