சீனா சென்று சில காட்சிகள் எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட ஷங்கர், அதே பூங்காவை தானே உருவாக்க திட்டமிட்டார்.

497

விக்ரம் வெகுகாலமாக நடித்து கொண்டிருக்கும் ஐ படம் இந்த ஜூன் மாதம் 15 தேதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என்ற செய்தி 2 மாதத்துக்கு முன்பே வந்தது, ஆனால் ஷூட்டிங்கே இன்னும் முடித்தபாடில்லை.

சில பல பட்ஜெட் காரணமாகவும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் தோல்வியை தழுவியதால் இந்த நிலைமை

இந்த நிலையில் இப்படத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு கை மாத்தி விடலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம் . தற்போது வரை படத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி உள்ளது.இருந்தாலும் மனம் தளராத ரவிச்சந்திரன் எப்படியோ படத்தை நாங்களே முடித்துவிடுவோம் என்று தற்போது பொள்ளாச்சியில் சீனாவில் உள்ளது மாதிரியான பூங்காவை செட்போட்டு படபிடிப்பு நடத்திகொண்டு இருக்கின்றனர் .

ஷங்கர் ஒன்றை நினைத்து விட்டால் அதை மாற்ற முடியாது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் சீனா சென்று சில காட்சிகள் எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட ஷங்கர், அதே பூங்காவை தானே உருவாக்க திட்டமிட்டார். அதற்காக ஏரியா தேடி வந்தவர் பொள்ளாச்சியில் ஒரு சில ஏக்கர்களில் ஒரு இடத்தை பிடித்தார். அந்த இடத்தில் சைனாவில் உள்ள பார்க்கில் என்னென்ன மரம் செடி கொடிகள் உள்ளதோ அது அத்தனையும் அங்கே வளர்க்கத் தொடங்கினார்.

அந்த பூங்காவை உருவாக்கவே கிட்டத்தட்ட ஒரு கோடி ஆனதாக சொல்கிறார்கள். இப்படி ஐ படத்தின் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்காகவும் நேரம் எடுத்து படமாக்கியிருக்கிறாராம் நம்ம பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஷங்கர்.

பாவம் உன் குற்றமா என் குற்றமா என்று விக்ரமும், ஷங்கரும் பாடாமல் இருந்தால் சரி!!

 

SHARE