சீன ராணுவத்தின் புதிய படையாக குரங்கு படை அறிமுகம்

515
சீனாவின் விமானப் படையில் புதிய வகை படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சீன தலைநகர் பீஜிங் அருகே ஒரு விமானப்படை தளம் உள்ளது. அங்கு பறவைகள் கூட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. போர் விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும் போதும் பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து விமானங்கள் மீது மோதி விபத்து அபாயத்தை உருவாக்குகின்றன.இதை சமாளிக்க சீன விமானப்படையினர் பட்டாசு வெடித்துப்பார்த்தனர். விசேஷ காக்கைகளையும், துப்பாக்கிகளையும் கூட பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால் முற்றிலும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக, விமானப்படைக்கு உதித்த யோசனைதான், குரங்குகள் படை.

பறவைகளை விரட்டும் வகையில், ஏராளமான குரங்குகளுக்கு விமானப்படை பயிற்சி அளித்துள்ளது. பயிற்சியாளரின் விசிலுக்கு அவை கட்டுப்படுகின்றன. மரங்களில் உள்ள பறவை கூடுகளை அழித்தல், பறவைகளை விரட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றன. ஒரு குரங்கு 6 கூடுகள் வீதம் அழித்ததில், 180 கூடுகள் அழிக்கப்பட்டு விட்டன.

இதனால், ‘‘சீன ராணுவத்தின் புதிய ரகசிய ஆயுதம்’’ என்று ராணுவ வட்டாரங்களில் குரங்குகள் செல்லமாக அழைக்கப்படுகின்றன.

china-pla-monkeys_002 china-pla-monkeys_003

SHARE