சுஜிபாலாவிடம் இழந்த சொத்துகளை கோர்ட் மூலம் மீட்பேன்-இயக்குனர் ரவிக்குமார் பேட்டி 

380


 ‘என்னை ஏமாற்றி நடிகை சுஜிபாலா வாங்கிய சொத்துகளை கோர்ட் மூலம் மீட்பேன்’ என்று இயக்குனர் ரவிக்குமார் கூறினார்.சுஜிபாலா ஹீரோயினாக நடிக்கும் ‘உண்மை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கிறார் பி.ரவிக்குமார். இவருக்கும், சுஜிபாலாவுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக மோதல் நடந்து வருகிறது. சுஜிபாலா தன்னைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக ரவிக்குமார் தெரிவித்தார். இதை சுஜிபாலா மறுத்தார். இந்நிலையில் ரவிக்குமார், ‘உண்மை’ படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:’உண்மை’ படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர், திருநங்கை, மனநிலை சரியில்லாதவன் என 3 வேடங்களில் நடிக்கிறேன். இந்தப் படத்தை 3 வருடங்களாக எடுத்து வருகிறேன். தாமதத்துக்கு படத்தின் ஹீரோயின் சுஜிபாலாதான் காரணம். அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்த பிறகுதான், எங்களுக்குள் காதல் மலர்ந்தது. என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்காக அவர் சொந்த ஊரில் பங்களா கட்டிக் கொடுத்தேன். நகை மற்றும் ரொக்கம் என பல லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால், சுஜிபாலா மறுக்கிறார். சுஜிபாலாவுடன் எனக்கு திருமணம் நடந்தது உண்மை. அதை மறைக்க முடியாது. சுஜிபாலாவிடம் இதுவரை நான் இழந்த சொத்துகளை மீட்க, கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். அடுத்து, ‘லவ் பண்ணலாமா வேண்டாமா’ என்ற படத்தை இயக்க இருக்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் கூறினார். பேட்டியின்போது ஷகீலா, ஷர்மிலி, சார்மிளா மற்றும் படக் குழுவினர் உடனிருந்தனர்

 

SHARE