இலங்கை ஏதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஏதேச்சாதிகாரம் நோக்கி நகர்ந்த போதிலும், தேர்தல்கள் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியதென அமெரிக்க உதவித் திட்டத்தின் ஆசிய பிராந்திய வலய பதில் துணை நிர்வாக அதிகாரி டெனிஸ் ரோலீன்ஸ் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் அல்லது அதற்கு அருகமையில் குடியேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அமெரிக்க உதவித் திட்டம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.