சூடுபிடிக்க தொடங்கிய லிங்கா!

544

கோச்சடையானுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் லிங்கா. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டுதான் போகிறது.

தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு இப்போதே கடும் போட்டி தொடங்கிவிட்டதாம். மேலும் இதன் டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.

ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி வரை வியாபாரம் ஆவது தெலுங்கு திரையுலகையே வியக்க வைத்துள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் தற்போது ரஜினி இந்திய அளவில் மிகவும் பேசப்படும் நடிகராகிவிட்டார் என்பதால் தானாம், மேலும் படத்தில் சோனாக்‌ஷி, அனுஷ்கா, சந்தானம் மற்றும் ஒரு ஹாலிவுட் நடிகை என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறதாம்.

 

SHARE